வவுனியாவிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பைசர் தடுப்பூசி
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முதற்கட்டமாக வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 1ம்,2ம் கொவிட் 19 தடுப்பூசிகள் போடாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே எதிர்வரும் நாட்களில் பைசர் தடுப்பூசியினை போடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளாக சினோபாம் தடுப்பூசியே போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments