Breaking News

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ! ஒருவர் பலி - 3 பேர் ஆபத்தான நிலையில் (PHOTOS)


யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் கோப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan)





No comments