Breaking News

பயங்கரவாதத் தடுப்பு (திருத்த) சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது


பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் 51  மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முற்பகல் முதல் மாலை வரை இடம்பெற்றது.

இதன்படி, குறித்த சட்டமூலம் தொடர்பான  வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் பின்னர் , இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. (Vavuniyan) 

No comments