8 மணித்தியால மின்வெட்டு விரைவில்
நாட்டில் தொடர்ந்தும் தவறான நிதி கொள்கை பின்பற்றப்படுமாக இருந்தால், நிலைமை மிக மோசமடைந்து, நாளொன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கும் அதிக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 700 மெகாவோர்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின்உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு பல யோசனைகளை தாம் அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலும், அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்கான மின்வெட்டை தவிர்ப்பதற்கு, 150 மில்லியன் ரூபா மாத்திரமே தேவைப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார் (Vavuniyan)
No comments