Breaking News

95 சதவீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு


ஆப்கானிஸ்தானின் மொத்த சனத்தொகையில் 95 சதவீதமானோர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக பெண் தலைத்துவ குடும்பங்கள் இந்த நெருக்கடிக்கு அதிகமாக முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் ஜூலையில் 14 மில்லியனாக இருந்ததுடன், இந்த தொகை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 23 மில்லியனாக உயர்வடைந்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் 3.5 மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Vavuniyan)

No comments