Breaking News

டக்ளஸ் தேவானந்தா செலுத்த தவறிய 97 லட்சம் ரூபா? நடந்தது என்ன? (ஆவணம் இணைப்பு)


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை மின்சார சபைக்கு 97 லட்சம் ரூபா நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தின் மின்சார கட்டணமே இவ்வாறு செலுத்தப்படாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பாரிய நிலுவை தொகை காணப்படுகின்ற போதிலும், டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கான மின்சாரம் இதுவரை துண்டிக்கப்படவில்லை என்று ரஞ்ஜன் ஜயலால் குறிப்பிடுகின்றார்.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஆகிய இன்றைய தினத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் பிரகாரம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்திற்கான முழு மின்சார கட்டணமாக 97 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரூபா 40 சதம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையாக காணப்படுகின்றது.



No comments