Breaking News

உக்ரைனில் குவியும் ஆயுத தளபாடங்கள் - பல நாடுகள் நேசக்கரம்


ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பல்கேரியா - 30 விமானங்களையும், போலந்து - 28 விமானங்களையும், ஸ்லோவாக்கியா - 12 விமானங்களையும் வழங்கவுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்றுடன் ஆறாவத நாளாக தொடர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷ்யா பின்வாங்குவதாக இல்லை.

உக்ரைனுன் பேச்சு நடத்த அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷ்யா இறங்கியுள்ளது.

தொடர்ந்தும் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, போர்த்துக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments