Breaking News

தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்ட கற்கை நெறி நிறைவு நாள் விழா


தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்ட கற்கை நெறி நிறைவு நாள் விழா வவுனியா சின்னப்புதுக்குளத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன் போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். 

வவுனியா பிராந்திய கற்கை நிலைய ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ருந்தது. 

இந்நிகழ்வில்  முதல் நிகழ்வாக கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, பிரதம விருந்தினர்கள் மற்றும் விரிவுரையாளர்களிற்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,  தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி பட்ட கற்கை நெறி நிறைவு நாள் விழா மலரும் வெளியிடப்பட்டது. 

இதேவேளை வவுனியாவில்  கல்விமாணி பட்ட கற்கை நெறியில் அகில இலங்கை ரீதியில் முதற்தடவையாக உடற்கல்வி பிரிவு கற்கை நெறியும்  நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா கல்வியற்கல்லூரியின் பீடாதிபதி கே. கமலகுமார் மற்றும் கல்வியற்கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (Vavuniyan) 














No comments