வவுனியா மாவட்டத்தில் அபிரான் முதலிடம்!!
தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவன் அரவிந்தன் அபிரான் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை சித்தியினை பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைமுடிவுகள் அண்மையில் வெளிவந்திருந்தது.
அதனடிப்படையில் வவுனியாமாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியால மாணவன் அரவிந்தன் அபிரான் 192 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை சித்தியினை பெற்றுள்ளார்.
அவருக்கு பாடசாலை சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது.(Vavuniyan)
No comments