வவுனியா ஏ9 வீதியில் விபத்து
வவுனியா யாழ் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
வவுனியா நகர் பகுதியில் இருந்து யாழ் வீதியினூடக பயணித்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமைடந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan)
No comments