Breaking News

கழிவுநீர் தொட்டி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் சடலம்


பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை கழிவு தொட்டியில் இருந்ததாக கூறப்படும் சடலத்தை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சடலம் புதன்கிழமை (30) மீட்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments