வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் விபத்து - இருவர் பலி மக்கள் வீதியை மறித்து முற்றுகை
வவுனியா குருக்கள்புதுக்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் பலியாகியுள்ளார்.
குருக்கள்புதுக்குளத்தில் கிராமத்தில் இருந்து மன்னார் பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்துடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்.
இதேவேளை அப்பிரதேச மக்கள் இதற்கான நீதிகோரி வீதியினை முற்றுகையிட்டுள்ளனர்.
No comments