ரஷ்ய − யுக்ரேன் போர் - அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு வெளியானது
இதன்படி, 350 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களையும், 54 மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான பொருட்களையும் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
மேலும் சர்வதேச ஸ்விஃப்ட் தகவல் அமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளை அகற்ற அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு ரஷ்ய மத்திய வங்கியை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தமது வான் பரப்பை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யாவால் 7வது நாளாகவும் போர் தொடருவதன் பின்னணியிலேயே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. (Vavuniyan)
No comments