Breaking News

ஆளும் தரப்பு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்


தற்போது இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு குறிப்பாக டீசல் பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

நாளாந்தம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் டீசலை பெற்றுவிடவேண்டும் என்ற கரிசனையோடு நீண்ட வாகனத் தொடரணி நிற்பது சகஜமாகி விட்டது.

இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் கடந்து செல்லும் போது மக்கள் எம்மைத் தாக்குவார்களோ என அஞ்சுவதாக ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க அச்சமடைந்துள்ளார்.

நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போது என் முகத்தை மூடிக் கொள்கிறேன். நான் சாரதியை விரைவாக செல்லச் சொல்கிறேன். அப்படியொரு நிலை உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கசப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், விரக்திதான் மிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.(Vavuniyan) 

No comments