சிபேட்கோ எரிபொருள் விலையை அதிகரித்தது
ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 77 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 76 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 176 ரூபாவாகும்.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையிலேயே, சிபேட்கோ நிறுவனமும் நேற்று முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. (Vavuniyan)
No comments