ஊரடங்குச்சட்டம் - பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என பொலிஸ் மா அதிபர் சி டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வருமாறு,
கொழும்பு மத்தி
பெட்டா, கெசல்வத்தை, டாம் வீதி, வொல்பென்டல் வீதி,கோட்டை, நீர்கொழும்பு, மருதானை மற்றும் மாளிகாவத்தை
கொழும்பு வடக்கு பிரிவு
கொழும்பு துறைமுகம் ,முன் கரை, மோதர / கொட்டாஞ்சேனை , மட்டக்குளி ,புளூமெண்டல் , கிராண்ட்பாஸ்,தெமட்டகொட, மிஹிஜய செவன
கொழும்பு தெற்கு பிரிவு
கொள்ளுப்பிட்டி , பம்பலப்பிட்டி ,கிருலப்பனை, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, BMICH, பொரளை,கறுவாத்தோட்டம்
நுகேகொட பிரிவு
மிரிஹான , மஹரகம,பொரலஸ்கமுவ , வெல்லம்பிட்டிய , தலங்கம,வெலிக்கடை, நவகமுவ , முல்லேரியா,ஹோமாகம,கொட்டாவ, அதுருகிரிய,பாதுக்க, ஹன்வெல்ல ,கொகடுவ , மீபே ,கடுவெல ,மாலபே
மவுண்ட் லாவினியா பிரிவு
கல்கிசை, பிலியந்தலை , அங்குலானை,தெஹிவளை , கொஹுவல ,மொரட்டுவ , கஹதுடுவ , மொரட்டுமுல்ல , எகொட உயன ,கெஸ்பேவ
களனி பிரதேசம்
களனி, கந்தானை , வத்தளை ,மஹாபாகே ,சபுகஸ்கந்த , பியகம ,மீகஹவத்த, ஜா – எல , ராகம , கிரிபத்கொட, கடவத்தை, எந்தரமுல்ல
No comments