Breaking News

பாடசாலைக் காதலால் நடந்த விபரீதம்!


மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால், கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, கத்தியால் குத்தப் போவதாக கூறிய பாடசாலை மாணவனும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களின் கழுத்து மற்றும் தலையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவி ஒருவருடனான காதல் விவகாரம் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவனான சந்தேகநபர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.(Vavuniyan) 

No comments