உயர்தர பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வழங்கிய உறுதி
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் காலத்திற்கான காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
அத்துடன், இம்முறை 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளையும் எதிர்வரும் சில தினங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
நேற்றையதினம் ஹோமாகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். (Vavuniyan)
No comments