Breaking News

இன்று மின்சாரம் இவ்வாறே துண்டிக்கப்படும்


நாட்டில் இன்று (10) மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உள்ளடக்கிய பகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (Vavuniyan) 

No comments