இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு - வெளிநாட்டவர்களும் வரிசையில்
இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மிகவும் அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.
சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சிலர் எரிவாயு கிடைக்காமையால் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். எரிவாயு வாங்க வந்த மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடைபெற்றுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் கூட தற்போது எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதை காணக்கூடிய அளவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. (Vavuniyan)
No comments