Breaking News

வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள காணிப்பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல்!!


வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களினால் இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைப்பதற்கான கலந்துரையாடலொன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி இன்று (04) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதன்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படுகின்ற வனவளம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,  குலசிங்கம் திலீபன்,செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள்,  திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments