இலங்கையின் பணவீக்கம் சடுதியாக அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணின் பிரகாரம், இலங்கையின் பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 17.5 வீதம் வரை அதிகரித்துள்ளது.
இது இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமையாகும்.
நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 16.8ஆக காணப்பட்டது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதத்தில் உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் 24.7 ஆக அதிகரித்திருந்ததுடன், உணவு இல்லாத பொருட்கள் மீதான பணவீக்கம் 11 வீதமாக உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments