Breaking News

தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அதற்கு பொறுப்பு அரசாங்கமே!


மருந்து தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மரணிக்க நேரிட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று தனியார் வைத்தியசாலை மற்றும் முதியோர் இல்லங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கு உடனடியாக மின்சாரம் மற்றும் அவசியமான எரிபொருள் என்பவற்றை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரப்பட்ட போதிலும் அது இதுவரையில் இடம்பெறவில்லை என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆனந்த குருப்பு ஆராச்சி தெரிவிக்கின்றார்.

சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்திக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்துடன், அவசர சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளிகளுக்கு பொறுத்தமான சிகிச்சைகள் வழங்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று கூறினார். 

எனினும் அவர்களை உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். (Vavuniyan) 

No comments