Breaking News

வைத்தியசாலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சத்திர சிகிச்சைப் பிரிவு!


யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துவ பொருட்கள் சிலவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார். (Vavuniyan) 

No comments