Breaking News

வவுனியாவில் டெங்கு நுளம்பை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்


நாட்டில் பரவலாக அதிகரித்து செல்லும் டெங்கு நுளம்பு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து வவுனியா நகரில் சுகாதாரத்துறையினால் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

அந்தவகையில் இன்று (09) காலை குருமன்காடு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . 

ஒவ்வொரு கட்டங்களாக இடம்பெறும் இந்நடவடிக்கையின் அறிக்கை சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்கப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவ் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தத்தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

எனவே வர்த்தக நிலையங்கள் , மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் , யோக்கட் கப் பொலித்தீன் என்பன தேடி அழிக்கப்பட்டு உங்களது பகுதிகளை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(Vavuniyan)




No comments