வவுனியாவில் விசேட அதிரடி படையினரால் மரக்கடத்தல் முறியடிப்பு
வவுனியா தவசிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்சென்ற முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்வமானது இன்று அதிகாலை இடம்பெற்றதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இக்கடத்தலில் ஈடுபட்ட ஒமந்தை, கூமாங்குளம், தோனிக்கல் பகுதியை சேர்ந்த மூவரை கைது செய்ததுடன் கடத்தலிற்கு பயன்படுத்திய கப் ரக வாகனம் மற்றும் 10 முதிரை மரக்குற்றிகளையும் கைப்பற்றி நெளுக்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments