இன்றிரவு வெளியாகும் பரீட்சை பெறுபேறுகள் − கல்வி அமைச்சர் விடுத்த உத்தரவு
2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இன்றிரவுக்குள் வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.
2021ம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் சிங்கள மொழி மூலம் 255,062 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 85,446 பரீட்சார்த்திகளுமாக 340,588 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
நாடு முழுவதும் 2943 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகள் நடைபெற்றதுடன், கொவிட் 19 தொற்றுக்குள்ளானோருக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments