Breaking News

பால்மா விலை அதிகரிப்பு -உணவகங்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்


இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் உணவகங்கள் பால்தேநீர் விநியோகத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளன.

400 கிராம் பால் மா பைக்கட் ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 400 கிராம் பால்மா பைக்கட் ஒன்றின் புதிய விலை 795 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை சுமார் 600 ரூபாவினால் அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இந்தநிலையில், சிறிறுண்டிச்சாலைகள் பால் தேநீர் விநியோகத்திலிருந்து முற்று முழுதாகவே விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நுகர்வோரிடமிருந்து முறையற்ற விதத்தில் அறவீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் பால் தேநீர் ஒன்றின் புதிய விலை 100 ரூபாவை தாண்டும் என கூறிய அவர், இவ்வாறு நுகர்வோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். (Vavuniyan) 

No comments