தேசிய விருது வழங்கும் விழாவில் முதன்மை விருதுகளை பெற்றுக்கொண்ட வவுனியா கானாம்ரு கலாலயம்
தேசிய விருது வழங்கும் விழாவில் முதன்மை விருதுகளை வவுனியா கானாம்ரு கலாலயம் பெற்றுக்கொண்டது.
புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் நடைபெற்ற கலை நிறுவனங்களுக்கிடையிலான தேசிய ரீதியிலான நடனம் மற்றும் இசை அரச விருது வழங்கும் விழாவில் வவுனியா கானாம்ருத கலாலயம் நான்கு முதன்மை விருதுகளை பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.
கானாம்ருத கலாலயத்தின் நிறுவுனர் மிருதங்க வித்துவான், க.கனகேஸ்வரன், வயலின் இசைக்கலைஞர் திருமதி. விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகியோரின்நெறிப்படுத்தலில் வவுனியா கானாம்ருத கலாலயத்தை சேர்ந்த மூன்று இசைத்துறை மாணவர்களே தேசியமட்டத்தில் நான்கு முதன்மை விருதுகளை பெற்று கலாலயத்திற்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பாரம்பரிய மிருதங்கம் ஆண்கள் (தனி) பிரிவில் செல்வன்.சத்தியசீலன் மௌலி, செல்வன்.நந்தகுமார் சேயோன் ஆகியோர் முதலாமிடத்ததையும்.
சாஸ்திரிய மேற்கத்தேய வாத்தியம் மற்றும் கர்நாடக பாரம்பரிய சுருதி வாத்தியம் (தனி) பெண்கள் பிரிவில் செல்வி செல்வகுமார் யதுசனா இரண்டு முதன்மை விருதுகளையும், பெற்று கலாலயத்திற்கு நான்கு முதன்மை விருதுகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற அரச விருது வழங்கும் விழாவில் பிரதமரும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால் விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments