Breaking News

இலங்கை மக்களுக்கு பேரிடியான தகவல்


இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவிக்கின்றது.

சீனி, பருப்பு, அரிசி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவிக்கின்றார்.(Vavuniyan) 


No comments