இரவில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு
கடவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாத நபர்களால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடவத்தை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (Vavuniyan)
No comments