பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடி தடை
உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை (போர்) குறித்து பேஸ்புக்கில் மூலமாக பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கருத்துக்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால், ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் போன்ற ரஷ்ய அரசு ஊடகங்கள் ஐரோப்பாவில் ஒளிபரப்பாவதை பேஸ்புக் நிறுவனம் தடுத்துள்ளது.
இதன் காரணமாக, ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டியதால் ரஷ்யாவில் பேஸ்புக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments