Breaking News

மனசாட்சிக்காக பதவியை துறந்த இராஜாங்க அமைச்சர்


நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே தன்னால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என்று நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து இராஜினாமா கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் அவர் தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கவும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நிமல் லான்சா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். (Vavuniyan) 


No comments