Breaking News

திருமணம் செய்தால் இலட்சக்கணக்கில் பரிசு -வெளியான அறிவிப்பால் பரபரப்பு


திருமணம் செய்தால் ரூபாய் 1.67 இலட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்நகரத்தின் தலைவர் முடிவு செய்தார்.

இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் தலைவர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பரிசுக்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் என கூறப்படுகிறது. (Vavuniyan) 


No comments