Breaking News

மயானத்தில் மின்சாரம் இல்லாததால் மூவருக்கு நடந்த விபரீதம்


எல்பிட்டிய மயானத்தில் சடலம் ஒன்றுக்கு தீ வைக்க முயன்ற சடலத்தை எரிக்கும் தொழிலாளி உட்பட மூவர் தீக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்பிட்டிய, ரஜமஹா விஹார மாவத்தையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நேற்று (மார்ச் 21) பிற்பகல் எல்பிட்டிய மயானத்திற்கு  கொண்டுசெல்லப்பட்டது.

அப்போது, ​​மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், உடலை தீ வைத்து எரிக்க, ஊழியர்களின் அறிவுறுத்தலின் பேரில் காகிதத்தின் உதவியுடன் சடலத்தை தீ வைத்து எரிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவர்களின் உடல் தீப்பற்றி எரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதில், காயமடைந்த இரு இளைஞர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. (Vavuniyan) 


No comments