அப்பா இனி உங்களை எப்படி பார்பேன்.. தந்தை வார்னேவின் மறைவுக்கு மகளின் உருக்கம்
ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் வார்னேவுடன் விளையாடி அனுபவத்தையும், வருத்தத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், வார்னேவின் மகள் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த பதிவில், இது கனவாக இருக்க கூடாதா? தந்தைக்கு ஒன்றும் இல்லை என என்னிடம் யாராவது சொல்லமாட்டார்களா? வாழ்க்கை இவ்வளவு கொடூரமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.
இனி எப்படி உங்கள் மெல்லிய குரலை கேட்பேன். செல்லம் எல்லாம் சரி ஆயிடும் என்று நீங்கள் சொல்வதை இனி நான் எப்போது கேட்பேன். இனி நீங்கள் சொல்லும் குட் மார்னிங், குட் நைட்டை நான் எப்படி கேட்பேன். கடைசியாக உங்களை பார்த்த நிகழ்வு என் வாழ்நாள் முழுவதும் நீடித்தி இருக்கின்றது.
கடைசியாக நாம் சேர்ந்து ஒன்றாக பாடலுக்கு ஆடினோம். அப்போது தான் உங்களை நான் கடைசியாக பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை அப்பா. உங்களுடைய சிரிப்பை கேட்க, மீண்டும் என்னை பாசத்துடன் அரவணைக்க என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்வேன்.
மீண்டும் என்னுடன் வாருங்கள் அப்பா.. நான் சாகும் வரை என் இதயத்தில் என்றும் நீங்கள் இருப்பீர்கள் அப்பா. உங்கள் நினைவு என்றும் இருக்கும். உங்களை காண, உங்களை தேடி நான் வருவேன் உங்களை நான் பெருமைப்படுத்துவேன். நீங்கள் எப்படி இருந்தாலும், நீங்கள் தான் என் தந்தை. லவ் யூ டாடி என உருக்கத்துடன் கூறியுள்ளார். (Vavuniyan)
No comments