Breaking News

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்!!


வவுனியா கற்பகபுரம் பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

கற்பகபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக குறித்த பெண்ணுக்கும் அவரது உறவினரான ஆண் ஒருவருக்கும் முரன்பாடு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த முரன்பாடு முற்றிய நிலையில் குறித்த நபரால் அப்பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளார். இதேவேளை குறித்த நபர் தங்களை தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி திட்டியதுடன் தமது கைதொலைபேசியையும் உடைத்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
 

No comments