மாவட்ட ரீதியிலும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி திட்டம்!
அரச எதிர்ப்பு நடவடிக்கையை மாவட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
அந்தவகையில் மார்ச் மாதத்திற்குள் மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பாரிய அரச எதிர்ப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அரச எதிர்ப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இதற்கான பொறுப்பு மாவட்ட அமைப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி அரச தலைவர் செயலகத்துக்கு முன்னர் சஜித் அணியினர் மாபெரும் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.
இதற்குப் பல தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட ரீதியிலும் இவ்வாறான போராட்டங்கள் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (Vavuniyan)
No comments