Breaking News

பழம் பறிக்க ஆசைப்பட்ட மாணவிக்கு ஏற்பட்ட நிலை


வீட்டின் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யாமரத்தில் பழம்பறிக்க ஏறிய பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றினுள்  வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 14 வயதுடைய தயாபரன் தர்மினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments