வவுனியாவில் நமது வீட்டுத்தோட்டத்தினை ஆரம்பிப்போம் வேலைத்திட்டம் ஆரம்பம்
நமது வீட்டுத்தோட்டத்தினை ஆம்பிப்போம் என்ற தேசிய வேலைத்திட்டத்தின் வவுனியா மாவட்ட ஆரம்ப நிகழ்வு இன்று ஓயார்சின்னக்குளத்தில் இடம்பெற்றது.
ஒவ்வொரு குடும்பங்களும் வீட:டுத்தோட்டத்தினை மேற்கொள்வதனை ஊக்குவிக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 27000 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மரக்கறி கன்றுகளுடன் விதைகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்பி நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் பயனாளி ஒருவரின் வீட்டில் சிறு தோட்டத்திற்கான ஆரம்ப செயற்பாடும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் நகரசபை உறுப்பினர் நிரோசன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். (Vavuniyan)
No comments