பேரழிவு ஏற்படும்” என ரஷ்யா மீண்டும் எச்சரிக்கை
ரஷ்ய எண்ணெயை நிராகரிப்பதானது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய துணைப் பிரதம மந்திரி அலெக்சாண்டர் நோவக் தெரிவித்தார்.
எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடியாததாக இருக்கும், என்றும் அவர் கூறினார். ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா முயல்கிறது.
வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வந்த நிலையில் குறித்த எச்சரிக்கை வந்தது.
உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மாஸ்கோவை பொருளாதாரத் தடைச் சுவரால் தாக்கியுள்ளன.
வாஷிங்டன் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments