வவுனியா தோணிக்கல் பொது மயான சிரமதானப்பணி
வவுனியா தோணிக்கல் பொது மயான சிரமதானப்பணி இன்று காலை இடம்பெற்றது.
வவுனியா தோணிக்கல்லில் உள்ள பொது மாயானமானது நீண்டகாலமாக சிரமதானம் செய்யப்படாமையால் பற்றைகள் சூழ்ந்த இடமாக மாறியதுடன் இங்கு சடலங்களை எரிப்பதற்கு அல்லது புதைப்பதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களிற்கு உள்ளாகினர்.
இந் நிலையினை கருத்திற்கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் லறி தலைமையில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிரமதானம் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் 1500 குடும்பங்கள் வாழும் தோனிக்கல், தேக்கவத்தை, கற்குழி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கிராம சேவையாளர் பிரிவிற்கான பொது மயானமாக இம்மயானம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments