எரிவாயு விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்
எரிவாயு கப்பலுக்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, எரிவாயுவை தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிடுகின்றது.
எரிவாயு விநியோகத்தை லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments