Breaking News

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் தமிழரசு கட்சியினால் வீடு கையளிப்பு


வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் 07 இலட்சம் பெறுமதியான வீடு ஒன்று தமிழரசு கட்சியினால் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் கிராமத்தில் நிரந்தர வீடு அற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையால் நிரந்தர வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தின் தலைவர் உட்பட மூவர் யுத்தத்தில் கொல்லப்பட்ட நிலையிலே, கனடா நாட்டு உறவுகளின் நிதி பங்களிப்பில் ஏழு இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. 

மூன்று உறுப்பினர்களை கொண்ட குறித்த குடும்பதிற்கு அரசின் எத்திட்டத்தின் கீழும் வீடொன்றை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 

No comments