நாடளாவிய ரீதியில் ஆயுதம் ஏந்திய முப்படையினர் கடமையில் - ஜனாதிபதி விசேட கட்டளை
நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் ஏந்திய முப்படையினரை கடமைக்கு அழைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கட்டளையொன்றை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கட்டளை குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்துள்ளார். (Vavuniyan)
No comments