Breaking News

வவுனியா வைத்தியசாலையில் சுகாதார தொழில் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் . நோயாளிகள் அசௌகரியம்


வவுனியா வைத்தியசாலையில் நிறைவுகாண் வைத்தியசேவையினர் மற்றும் துணை மருத்துவ சேவையினருமாகிய 18 தொழிற்சங்க கூட்டமைப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்திருந்தது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கிளினிக் சேவைகள், இரத்த பரிசோதனைகள், கதிரியக்க சேவைகள் மற்றும் மருந்தகம் போன்ற பல்வேறான சேவைகள் இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 










No comments