ஜனாதிபதி தன்னையும் அரசையும் தப்பவைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். - வினோ MP
ஜனாதிபதி தன்னையும் அரசையும் தப்பவைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் சிறிநகர் மக்களின் 25 வருட கோரிக்கையாக இருந்த விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினால்தான் எங்களுக்குரியதை எங்களுடைய உரிமையை பெற முடியும். நாங்கள் போராடாமல் வீட்டுக்குள் இருந்தால் எங்களுடைய உரிமையை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி எதிர் வரும் 15ம் திகதி தன்னை சந்திக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
நாடு தற்போது இக்கட்டான நிலைமையில் இருந்து கொண்டு இருக்கின்றது. விலைவாசிகள் விடியும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடுகளும் மிக மோசமானதாக இருக்கின்றது. வரிசையாக நிற்கின்ற யுகத்தை மீண்டும் சந்திக்கின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது. எந்த பொருளை வாங்குவதானாலும், வாங்க நினைத்தாலும் கூட நாங்கள் வரிசையில் நின்றுதான் வாங்குகின்ற நிலைமை வந்து கொண்டிருக்கின்றது.
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலையும் தொடர்ந்து அதிகரித்த வன்னமே உள்ளது. இது போன்றே பல பொருட்களின் கும் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்த நாட்டை ஆள முடியாமல் ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ச மிகவும் தடுமாறிக்கொண்டு இருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரின் தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டை ஆள முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது.
அவரிற்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இன்று அவரை துரத்தியடிக்க வேண்டும் அவர் இந்த நாட்டை ஆள தகுதி இல்லாதவர் என்று சொல்கின்ற நிலைமையை உருவாகியுள்ளது. தற்போது எம் நாடு வெளிநாடுகளிலே பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றது. இனி நாங்களும், நீங்களுமாக இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் பிச்சை எடுக்கின்ற நிலைமை இருக்கின்றது.
இப்படியான ஒரு நிலைமையில் நாட்டை ஆட்டகான வைத்து, அதளபாதாலத்தில் தள்ளிவிட்டு தற்போது தான் தப்புவதற்காக இவ்வளவு காலமும் எங்களிடம் பேச முடியாத நிலைமையில் இருந்த ஜனாதிபதி, தற்போது ஐநா மனித உரிமை பேரவையினால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில் தன்னையும் அரசையும் தப்பவைப்பதற்காக எங்களோடு பேச வேண்டும் என்று அழைப்பு விடுகிறார், என்று தெரிவித்தார். (Vavuniya)
No comments