சாரைப்பாம்பை உயிருடன் விழுங்கிய கொடிய நாகம்! திகிலூட்டும் (Video)
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள், அந்தவகையில் பாம்பு என்று சொன்னாலே பயந்து நடுங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் நாகப்பாம்பு என்றால் சொல்லவா வேண்டும், இந்த வீடியோவில் காட்டுக்குள் அமைதியாக இருக்கும் நாகப்பாம்பு, சாரைப்பாம்பை பார்த்ததும் சண்டையிட தயாராகிறது.
சாரைப்பாம்பு, அதன் அருகில் வந்ததும் மிக ஆக்ரோஷமாக படம் எடுத்தபடி சண்டையிடுகிறது. இரண்டு பாம்புகளும் சண்டையிட்டாலும், சாரைப்பாம்பின் உடலை கடித்து விடுகிறது நாகம், சாரைப்பாம்பு எவ்வளவோ போராடியும் ஜெயிக்க முடியாமல் போனதால் கடைசியால் உயிருடன் அதை விழுங்கிவிடுகிறது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை ஒருநிமிடம் பதறவைத்து விட்டனஇ எந்த நாட்டில் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஏதுமில்லை. National Geographic சேனில் யூடியூப் பக்கத்தில்இ சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. (Vavuniyan)
No comments