வவுனியா அல் அமீன் பாடசாலையில் 2 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் திறந்து வைப்பு
வவுனியா பாவக்குளம் யூனிட் 2 அல் அமீன் பாடசாலையில் குவைட் நாட்டின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தினை வட மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோர் திறந்துவைத்திருந்தனர்.
இதன்போது குவைத் நாட்டின் தூதுவரின் பிரதிநிதி மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், செட்டிகுளம் கோட்ட கல்வி அதிகாரி செல்வரட்ணம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். (Vavuniyan)
No comments