Breaking News

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து - 50 பேர் பலி


நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50 க்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனர். 

நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. குறித்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெடி விபத்து சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோா் பலியாகினா். எனினும் இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டவா்கள் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்தில் காயமடைந்தவா்கள், சேதங்கள் ஆகியவை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவாகியுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரையும் அவா்கள் தேடி வருகின்றனர். (Vavuniyan) 

No comments